Choose Language:

தூய்மை இந்தியா

பொதுச் சுகாதாரம் தொடர்பாக உலகெங்கும் சுவையான, பயனுள்ள விவாதங்கள் தொடங்கியுள்ளன. சுகாதாரம், ஊட்டச்சத்து பற்றிய இவ்விவாதங்கள் சமூக ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக 'தூய்மை இந்தியா இயக்கம்' பற்றி பிரச்சாரம் நடந்தும், திறந்தவெளியில் மலம் கழிப்பது நீடிக்கிறது. கிராமப்புறங்களில் இப்பழக்கம் 52% அளவுக்கு இருக்கிறது. 'தூய்மை இந்தியா' இயக்கத்தை இந்நிலையில் கைவிடுவது சரியல்ல.

எல்லோருடைய வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்பது மட்டும் இந்த இயக்கத்தின் நோக்கமல்ல. ஒவ்வொருவரும் தங்களுடைய தனிச் சுகாதாரத்திலும் அக்கறை காட்ட வேண்டும், வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினால், கால்களைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்; உணவு அல்லது பானங்களை அருந்தும் முன்னால் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்' சுத்தமான நீரையே குடிக்க வேண்டும்; கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். இதனால் கை நக இடுக்குகளில் அழுக்குகளோ, கிருமிகளோ இருந்தால் அழிந்துவிடும். இச்செயல்களால் மட்டுமே சிறார்களின் உடல் எடை - உயரக் குறைவைப் போக்க முடியாது என்பது உண்மைதான், ஊட்டச் சத்துக் குறைவுக்கும் இது தீர்வு இல்லைதான்; உயரக் குறைவுக்குப் பல காரணங்கள், அதில் ஒன்று உடல் பருமன். நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உடலில் புகுவதால் உடல் பெருக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் வயிற்றுப்போக்கு போன்ற நோயை உண்டாக்குவதல்ல என்றாலும் கெடுதல்தான்.

இந்திய நகரப்பகுதிகளில் திறந்தவெளி மலம் கழிப்பு 7% ஆகவும், கிராமங்களில் 52% ஆகவும் இருக்கிறது. நகர்ப்புற சிறார்களில் வயதுக்கேற்ற உயரம் இல்லாதவர்களின் எண்ணிக்கை குறைவு. நகரங்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது.

Rate your review

comments

leave a comment

Facing Same Issue?

Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Write to us