Choose Language:

நூலகத் துறை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும்

நூலகங்களில் உறுப்பினர் சேர்க்கை, புரவலர்கள் சேர்க்கை நடத்துவது, நூலகத்துக்குத் தேவையான தளவாடங்களைப் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறுவது என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது நூலகத் துறை. இவை தொடர்பாக நூலகர்கள் கல்வித் துறை அதிகாரிகளைச் சந்திப்பது, அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்குப் பரிசு அறிவிப்புகளும் வரவேற்புரிக்குரியவை. ஆனால், இத்தகைய அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவருகின்றனவே தவிர, அவை முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதில்லை என்பதுதான் ஏமாற்றம் தருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளாவது செயல்வடிவம் பெறுமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

2014 ஆகஸ்ட் 12-ல் நூலகத் தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது, அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கும் நூலகர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் நூலக விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது அதே அறிவிப்புகள் மேலும் புதிய சில திட்டங்களோடு மீண்டும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

உறுப்பினர் சேர்க்கை, புரவலர்கள் சேர்க்கை, நூலகங்களுக்குத் தேவையான உபகரணங்களை நன்கொடையாகப் பெறுதல் ஆகியவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய விஷயங்கள். நூலகங்களுக்கு அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை நூலகங்களை நோக்கி அழைத்துவர, நூலகர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் கரம்கோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பள்ளிக்கூடங்களில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழங்கள் வாயிலாக இணைந்து இயங்குவதைப் போல, பொதுநூலகங்கள் வாசகர் வட்டங்களுடன் இணைந்து செயல்படலாம். நூலகத் தேவைகளை உள்ளூர் அளவில், வாசகர்களே கூடி நிறைவுசெய்துகொள்ளலாம். வாசகர்களையும் இணைத்துக்கொண்டு நூலகங்களை நிர்வகிப்பது, நிச்சயம் பொது நூலகங்களின் வசதிகளை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த அடிப்படையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது நூலகத் துறையின் அறிவிப்புகள் முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. அதேநேரத்தில், இத்தகைய அறிவிப்புகள் மட்டுமே போதுமானவையல்ல. ஆண்டுதோறும் வெளியாகும் சிறந்த புத்தகங்களை உடனுக்குடன் வாங்குவதற்கான முயற்சிகளையும் நூலகத் துறை முன்னெடுக்க வேண்டும்.

Rate your review

comments

leave a comment

Facing Same Issue?

Consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.

Write to us