
யூரி ககாரின்
1961,ஏப்ரல்,12. ரஷிய வீரரான யூரி ககாரின் 108 நிமிட விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து உலகை வியக்க வைத்துச் சாதனை படைத்தார்!
விண்வெளியில் முதல் வீரர்கள்
ககாரினை அடுத்து ஆலன் ஷெப்பர்ட் என்னும் அமெரிக்கர் 1961, மே,5ஆம் தேதி விண்வெளிக்கு ஏகினார்.
ரஷிய வீ ராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா 1963,ஜூன் மாதம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு விண்வெளி ஏகிய முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார்; பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தார்! அவருடன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா அப்போது அவருடன் பறக்க முடியவில்லை. காத்திருந்தார். 1982ஆம் ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்பு வந்தது.
விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி ஸாலி ரைட். ஸ்பேஸ் ஷட்டில் மிஷன் STS 7இன் ஒரு பகுதியாக 1983, ஜுன்18இல் அவர் விண்வெளியை அடைந்து சாதனை படைத்தார்.
விண்வெளியை ரஷியர்களும் அமெரிக்கர்களுமே சுமார் 20 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடின.இந்த இரு தேசங்களைத் தவிர முதலில் விண்வெளியில் நுழைந்தது செக்கோஸ்லோவேகியா. 1978இல் சோவியத் சோயுஸ் 28 மிஷனில் செக்கோஸ்லோவேகிய வீரர் விளாடிமிர் ரெமக் விண்வெளி ஏகினார். இதன் பின்னர் ஏராளமான நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு வீ ரர்களை அமெரிக்க, ரஷிய விண்கலங்களில் விண்ணுக்கு அனுப்பின.
விண்வெளியில் அதிக வயதானவர்
அமெரிக்க செனேட்டர் ஜான் க்ளென் தனது 77ஆம் வயதில் டிஸ்கவரி STS -95 மிஷனில் 1998 அக்டோபரில் விண்ணில் பறந்தார்.இந்த மிஷனில் அவரது பயணம் இரண்டாவது பயணம். 1962 பிப்ரவரியில் அவரது முதல் பயணம் அமைந்தது. ஆக அவர் இன்னொரு அரிய சாதனையையும் நிகழ்த்தி விட்டார். மிக நீண்ட இடைவெளியான 36 வருடம் 8 மாதங்களில் பயணம் மேற்கொண்ட ஒரே வீரர் அவர் தான்!
விண்வெளிக்குச் சென்ற அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெறுபவர் பெக்கி விட்ஸன். வயது 57. 2016-2017இல் எக்ஸ்பெடிஷன் 50, 51இல் அவர் பறந்தார்.
COMMENTS
No Comments
leave a comment